நத்தம் கோசுகுறிச்சி கரையூர் பகுதியில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்
புதுச்சேரியில் இருந்து கேரளா நோக்கி ஒரு காரில் 4 பேர் நேற்று வந்து கொண்டிருந்தனர். காரை ஓம்பிரகாஷ் (45) ஓட்டி வந்தார். துவரங்குறிச்சி – மதுரை நான்கு வழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோசுகுறிச்சி கரையூர் பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் டிரைவர் ஓம் பிரகாஷ், காரில் பயணம் செய்த சிவகுமார் (43), அவரது மனைவி விஜயலட்சுமி (39), மகன் நிசான் குமார் (16) காயமடைந்தனர். தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment