கொடைக்கானல் கோடை விழா - 2024ன்
61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று 61வது மலர் கண்காட்சி தொடங்கியது வேளாண்மை உற்பத்தி ஆணையர், அரசு முதன்மைச் செயலாளர்- ஆபூர்வா திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இந்த மலர் கண்காட்சி இன்று முதல் வரும் 26 ஆம் தேதி முதல் மொத்தம் பத்து நாட்கள் இந்த மலர் கண்காட்சியில் நடைபெறும் இந்த மலர்க்கண்காட்சியில் வெளிமாநிலங்களில் இருந்து நடவு செய்யப்பட்ட செடிகளில் இருந்து பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன இந்த மலர் கண்காட்சியில் இன்னிசை கச்சேரி மேஜிக் ஷோவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment