வேடசந்தூர் அருகே மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கூலிப்படை வைத்து கொலை முயற்சி வழக்கில் மேலும் 17 வயது சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பெரியபட்டியில் கோழிப்பண்ணை காவலாளி பாரிச்சாமியை மனைவி பரிமளா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய கூலிப்படையினரை தயார் செய்து 1,20,000 பணம் கொடுத்து கூலிப்படையினர் தாக்கியதில் படுகாயம் அடைந்த கணவர் பாரிச்சாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் மனைவி பரிமளா, பெரியையன் (எ) குமார் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தலைமறைவாக இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளிகள் எலி (எ) காளிமுத்து(19), விக்கி (எ) விக்னேஸ்வரன் மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேர் உட்பட 4 பேரை வேடசந்தூர் டிஎஸ்பி.துர்காதேவி மேற்பார்வையில் வேடசந்தூர் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் காவலர்கள் பாசித் ரகுமான், பாலாஜி, நாகராஜ், பாஸ்கரன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment