திண்டுக்கல் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் பாமக வேட்பாளர் கவிஞர் ம.திலகபாமா வாக்குப்பதிவு
INDIA கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் அவரது சொந்த கிராமமான ராமலிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் தனது மனைவி கவிதாவுடன் வருகை தந்து வரிசையில் நின்று வாக்குபதிவு செய்தார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் திருநெல்வேலி மேலப்பாளையம் கணேசபுரம் வாக்கு சாவடியில் வாக்களித்தார்.
சிவகாசியில் உள்ள மாநகராட்சி AVT பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், காலை 7 மணிக்கு திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர் ம.திலகபாமா வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment