அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திண்டுக்கல்லில் பேச்சு
நமது வெற்றி வேட்பாளர் நெல்லை முபாரக் நமது கூட்டணி சார்பில் இரட்டை இலையில் போட்டியிடுகிறார். அவரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
3 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தார். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். விரக்தியில் விளிம்பில் உள்ளனர். ஸ்டாலின், உதயநிதி உருண்டு பெரண்டாலும் ஜெயிக்க முடியாது. பிஜேபி உடன் திமுக கள்ள கூட்டணி வைத்துள்ளனர்.
திமுக 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 வருஷம் பென்ச் தேய்த்தது தான் மிச்சம். தமிழகத்தில் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்.
பெட்ரோல் டீசல் விலையை இதுவரை 3 ரூபாய் தான் குறைத்து உள்ளீர்கள் 5 ரூபாய் குறைக்கிறேன் சொன்னீங்க குறைத்தீர்களா? மக்களை ஏமாற்றுவதில் ஸ்டாலின் வல்லவர்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
திண்டுக்கல் நகராட்சியை மாநகராட்சி ஆக்கியது அண்ணா திமுக தான் என்றார்.தேர்தல் பத்திரத்தின் மூலம் 656 கோடி ஸ்டாலின் வாங்கியுள்ளார். ஆன்லைன் ரம்மி மூலம் சூதாட்டம் ஆன்லைன் மூலம் 530 கோடி திமுகவுக்கு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சி வந்தவுடன் நோண்டி எடுப்போம் என்று பழனிச்சாமி பேசினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment