வடமதுரை காவல் நிலையம் பின்புறம் அடுத்தடுத்து வீடுகளில் நகை, பணம் கொள்ளை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலையம் பின்புறம் உள்ள மகாலட்சுமி நகரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நகை, பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவை திருடுபோனது. 2 வீட்டில் கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தெரிய வில்லை. இப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது50) என்பவரின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர் 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனர். மேலும் மற்றொரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது வீட்டில் இருந்தவர்கள் எழுந்துவிடவே கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் இருந்து தடையவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment