சூடாமணிபட்டி விஸ்வபாரதி சுவாமிகள் சிவசக்தி சித்தர்கள் அருளாட்சி பீடம் ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டு விழா
திண்டுக்கல் மாவட்டம் சூடாமணிபட்டி கிராமத்தில் தவத்திரு அருட்கவி விஸ்வபாரதி சுவாமிகள் சிவசக்தி சித்தர்கள் அருளாட்சி பீடம் ஆசிரமத்தில் (14-4-2024 )இன்று குரோதி தமிழ் புத்தாண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சின்னாளபட்டி வாழ் சிவநெறிச் செல்வரும், திருமுருக கிருபானந்த வாரியாரின் சிஷ்யருமான கே.சி. இராமசாமி ஐயா அவர்கள் விழாவினை நெறிப்படுத்தி தன் அழகிய பேச்சாற்றலால் கலகலப்பாக கொண்டு செலுத்தினார்.தமிழ்ப் புத்தாண்டு குரோதி வருஷ பஞ்சாங்கம் பலன்கள் வாசிக்கப்பட்டது .
சின்னாளபட்டி தர்ம சாஸ்தா அறக்கட்டளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணிவரை பஞ்சாங்கம் வாசித்து அவரவர்க்குரிய இராசிபலன்கள் ,
நட்சத்திர பலன்கள் , கந்தாய பலன்கள் அனைத்தும் இன்று சிறப்பாக வாசிக்கப்பட்டது. குரோதி வருட பஞ்சாங்கம் அனைத்து ஜோதிடர்களுக்கும் வழங்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சிறந்த ஜோதிடர்கள் இந்த வருடத்திற்குரிய இராசிபலன் வருடப்பிறப்பு பலன், கந்தாய பலன் ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்து விவாதித்து முடித்த பின்னர் சிறப்பு மதிய விருந்து ஆசிரமத்தில் வழங்கப்பட்டது. ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சிவகுமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment