திண்டுக்கல்லில் கிணற்றில் விழுந்த கணவன், மனைவியை காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் உள்ள 70 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் கிணற்றில் அப்பகுதியை சேர்ந்த பாமாருக்மணி என்பவர் தவறி விழுந்தார். உடனடியாக கணவர் செல்லமுத்து மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார். இருவரும் கிணற்றுக்குள் தத்தளித்தனர். இது குறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தீயணைப்புத்துறை மாவட்ட உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு வலை மூலம் கணவன் செல்லமுத்து மற்றும் மனைவி பாமா ருக்மணி ஆகிய இருவரையும் உயிருடன் மீட்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தீயணைப்புத் துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment