கொடைக்கானலில் லிஃப்ட் கொடுத்தவருக்கு கத்தி குத்து :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலையை சேர்ந்தவர் முனியாண்டி இவர் தனது பணியை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு வரும் பொழுது செண்பகனூர் என்ற பகுதியில் முனியாண்டியின் இருசக்கர வாகனத்தை வழிமறித்த மூன்று இளைஞர்கள் தாங்கள் செல்ல இருந்த பேருந்தை தவறவிட்டதாக கூறி முனியாண்டி இடம் லிப்ட் கேட்டுள்ளனர் அதை நம்பிய முனியாண்டி பரிதாபப்பட்டு மூவரையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு டோல்கேட் பகுதி அருகே சென்றபோது அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முனியாண்டியை தாக்கியும் மிரட்டி வாகனத்தை பறித்துச் செல்ல முற்பட்டபோது முனியாண்டி சத்தம் போட்டு உள்ளார் மேலும் முனியாண்டியின் சத்தம் கேட்டு டோல்கேட்டில் இருந்த காவல்துறையினர் அங்கு வந்து மூவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment