திண்டுக்கல் மாநகராட்சியில் வரும் ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிப்பு
திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024-2025ம் நிதியாண்டின் முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரையிலான) சொத்து வரி தொகைகளை சம்பந்தப்பட்டவர்கள் செலுத்த வேண்டும்.
மேலும் வரும் 30.4.2024ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பெற்று பயனடையலாம் என திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர். பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment