திண்டுக்கல் மணிக்கூண்டில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது:
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களுக்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்றது இதில் சி.பி.எம்-ன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் கழக துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment