சிறுமலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 6 April 2024

சிறுமலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

 


சிறுமலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலாளி மயங்கி விழுந்து சாவு


 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியார் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 50)இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஜோதிலட்சுமி என்ற மனைவியும், முத்துலட்சுமி (23) என்ற மகளும், முத்துராம் (18) என்ற மகனும் உள்ளனர். செல்லப்பாண்டி நீரழிவு நோய் மற்றும் இரத்தக்கொதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.


இந்த நிலையில் இவர் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சேதுராஜ், பொன்னுத்துரை, சிவ பரதேசி, முருகன் ஆகியோருடன் சேர்ந்து காரில் திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர்புரம் அருகில் உள்ள அகத்தியர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். அங்கு செல்லப்பாண்டி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அதே காரில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad