சிறுமிகள் கற்பழிப்பு வழக்கில் திடுக்கிடும் தகவல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 6 April 2024

சிறுமிகள் கற்பழிப்பு வழக்கில் திடுக்கிடும் தகவல்

 


சிறுமிகள் கற்பழிப்பு வழக்கில் திடுக்கிடும் தகவல்


வீடியோ எடுத்து அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என மிரட்டல் தலைமறைவான ரவுடியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு 


திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். தாய் இல்லாத சூழலில் தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். இதில் 19 வயது சிறுமிக்கு திருமண மாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் 19 மற்றும் 


17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் 4 பேரும் கடந்த வாரம் ஒரு கோவில் திரு விழாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்


கொண்டிருந்தனர். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு சகோதரிகள் 2 பேரும் சாலையின் செம் நின்றிருந்தனர். காதலர்கள் பில் தொகையை கொடுத்து கொண்டி ருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் சிறுமிகளை மிரட்டினர்.


இதை பார்த்ததும் காதலர்கள் ஓடி வரவே அவர்களை கத்தி முனையில் மிரட்டி தங்களுடன் பைக்கில் வருமாறு கூறினர்.  தாமரைக்குளம் என்ற இடத்திற்கு இரவில் தங்க வைத்தனர். பின்னர் மேலும் ஒருவரை அங்கு வரவழைத்தனர்.


அங்கு காதலர்கள் 2 பேரையும் கட்டி போட்டு விட்டு 2 சகோதரிகளையும் 4 வாலிபர்கள் மாறிமாறி பலாத்காரம் செய்தனர்.  இதனை அவர்கள் வீடியோ வாகவும் எடுத்துக் கொண்டனர். நாங்கள் எப்போது கூப்பிட்டாலும்  நீங்கள் எங்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இந்த  விடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.


அதிகாலை வரை தங்கள் காம இச்சையை நிறை வேற்றிய 4 வாலிபர்களும் பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.


பின்னர் இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகளை பலாத்காரம் செய்த மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார் (வயது 21). முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார் (26), முருகபவனத்தை சேர்ந்த சூர்யபிரகாஷ் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தலைமறைவான சுள்ளான்  என்ற பிரசன்னகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். பிரசன்ன குமார் மற்றும் சரண்குமார் மீது திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரசன்னகுமார் எப்போதும் செல்போன் பயன்படுத்த மாட்டாராம். தனது நெருக்கமான நண்பர்கள் சிலரின் செல்போன் எண்களை மனப்பாடமாக வைத்திருப்பாராம். யாரிடமாவது செல்போன் வாங்கிப் பேசுவார் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரும் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். வருமானத்திற்காக பல திருட்டு, வழிப்பறியிலும் ஈடுபட்டு வருவது இவர்களின் தொழிலாக உள்ளது.


கைதான 3 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை தவிர மற்ற வீடியோக்களும் இவர்கள் போனில் இருந்ததால் யாரிடமாவது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் வடமாநிலங்களில் மட்டுமே இதுபோல கூட்டு பலாத்காரம், காதலர்களை கட்டிப் போட்டு 4 பேர் கற்பழிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது அதே போல ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad