கொடைக்கானலில் சுற்றுலா வாகனத்தை தாக்கிய காட்டு மாடு பொதுமக்கள் பயணிகள் அச்சம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி அருகேயுள்ள லோயர் சோலா சாலை பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று சென்றுள்ளது. அப்போது அவ்வழியே வந்த காட்டு மாடு ஒன்று திடீரென அந்த வாகனத்தை வழிமறித்ததுடன் முட்டியும் தள்ளியது.இதனால் சுற்றுலா பயணிகள் அலறியடித்து காரை வேகமாக வேறு திசையில் திருப்பி சென்று விட்டனர். மேலும் கொடைக்கானல் தந்திமேடு பகுதியில் காட்டு மாடு ஒன்று தொடர்ந்து முகாமிட்டு அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே வனத்துறையினர் காட்டு மாடுகளை வனப்பகுதிககுள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment