திண்டுக்கல் பஸ்நிலையத்தில் சீன மொழியில் பெயர்பலகை பயணிகள் அதிர்ச்சி
தென்தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையமாக திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, திருப்பூர்,காரைக்குடி, மதுரை, திருச்சி, தேனி, கம்பம், கோவை, கன்னி யாகுமரி, இராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இரவு பகலாக சுமார் 1000க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களில் உலக பொது மறை வாக்கியமான திருக்குறளையும் அதனுடைய அதிகாரங்களையும் பஸ்சில் இடம் பெற செய்து தமிழின் பெருமைகளை உணர்த்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட டி.என்.57 N 2410 என்ற அரசு பஸ்சில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும் அரசு பஸ்ஸில் இடம் பெற்றிருக்கும் மின்னணு பெயர் பலகையில் சீன மொழி இடம் பெற்று இருந்தது. அந்த அரசு பஸ் சீன மொழியிலேயே திண்டுக்கல் பஸ் நிலையத்திலிருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால் பஸ்சில் ஏற இருந்த பயணிகளும், காத்திருந்த பயணிகளும் தமிழ் சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஹிந்தி மொழிக்கே எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் சீன மொழியுடன் அரசு பஸ் இயங்கியது பெறும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment