பட்டிவீரன்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் குத்துவிளக்கு பூஜை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
திண்டுக்கல் பட்டிவீரன்பட்டியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. அதில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் குத்துவிளக்குடன் பெண்கள் அமர்ந்து லட்சார்ச்சனை, குங்குங்குமார்ச்சனை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையானது மாங்கல்ய பாக்கியம் கிடைத்திடவும், தோஷங்கள் நிவர்த்தி செய்யவும், உலக நன்மை அடைந்திடவும், விவசாயம் செலுத்திடவும், மாணவ மாணவிகள் அருவித்திறனை மேம்படுத்தவும் என பல்வேறு பிரார்த்தனைகளுடன் இந்த திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment