தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட்
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி,சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர். திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் நாளை வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தாண்டில் தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment