திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடையில் விற்பனையாளர் கழுத்தில் கத்திய வைத்து மிரட்டி ரூ.500 பணம், 10 மதுபான பாட்டில்கள் கொள்ளையடித்த 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் அருகே உள்ள யாகப்பன்பட்டி டாஸ்மார்க் கடையில் ஜோசப்சேவியர் மதுபானம் விற்றுக் கொண்டிருந்தபோது மாதவன் (எ) சுள்ளான் மற்றும் பிரசாந்த் ஆகிய 2 பேர் கடைக்குள் நுழைந்து ஜோசப் சேவியரின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து ரூ.500 பணம், 10 மதுபான பாட்டில்கள் பறித்து சென்றதாக ஜோசப்சேவியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு மாதவன், பிரசாந்த் ஆகிய 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment