நல்லாம்பட்டியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது 2 கிலோ கஞ்சா, ஒரு டூவீலர் பறிமுதல் தாலுகா போலீசார் அதிரடி
திண்டுக்கல் அருகே நல்லாம்பட்டி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பதாக புறநகர் டிஎஸ்பி உதயகுமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் நல்லாம்பட்டி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி சுடுகாடு பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மாதவன், பிரசாந்த், பாலகிருஷ்ணன், சுரேஷ், ரமேஷ், மோசஸ் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, ஒரு டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment