சங்கடஹர சதுர்த்தி விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள லட்சுமி விநாயகர் கோவிலில் சதுர்த்தி பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் விநாயக பெருமானுக்கு பக்தர்கள் அரும்புல், மலர்மாலைகள், எருக்கம் பூ உள்ளிட்ட பல்வேறு மாலைகளை காணிக்கையாக வழங்கி சுவாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள முருகனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதைபோல் நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் உள்ள விநாயகர் கோவிலில் அதே பூஜைகள் நடந்தது. இங்கும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment