பெருமாளையும் விட்டு வைக்காத பெரும் வெயில் குடை பிடித்தபடி நகர்வலம் வந்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள்
திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment