213 கிலோ கஞ்சா கடத்திய கஞ்சா வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கர்நாடகாவில் கைது - திண்டுக்கல் தாலுகா போலீசார் அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு 213 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சின்னசாமி மகன் சிவா(33) என்பவர் தலைமறைவாக இருந்தார். நிலையில் திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் பிரபாகரன், பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்பல்புரா மாவட்டத்தில் பதுங்கி இருந்த சிவாவை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment