கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இந்த வருடம் 61வது மலர்கண்காட்சி நடைபெற உள்ளதால் பூங்கா நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 கட்டமாக ஊட்டி, பெங்களூரு, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் சுமார் 2½ லட்சம் மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டது. அந்த நாற்றுகள் தற்போது பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளது. இதில் சால்வியா,பாப்பி, டெல்பினியம், ஆஸ்டர், மேரி கோல்டு, பேன்சி வகைகள், பெட்டுன்னியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுல்லா, பிளாக்ஸ், டேலியா மற்றும் ரோஜா உள்ளிட்ட பூக்கள் மலர் படுகைகளில் பூக்கத் தொடங்கியுள்ளது. இது பார்ப்பவர்களின் கண்களை கவரும் வகையிலும் அமைந்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment