கொடைக்கானலில் காட்டுத்தீ தொடர்வதால் பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் பகுதிகளில் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை
கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூம்பாறை, மன்னவனூர் பகுதிகளில் காட்டுத்தீ தொடர்வதால், பூம்பாறையில் இருந்து கூக்கல், மன்னவனூர் செல்லும் கனரக வாகனங்கள், சுற்றுலா பயணிகள் வாகனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களுக்கு தடை இல்லை. இந்த தடை நாளை மற்றும் நாளை மறுதினம் அமலில் இருக்கும் என மாவட்ட வன அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment