திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நீத்தார் நினைவு நாள் அனுசரிப்பு
திண்டுக்கல் தீயணைப்புத்துறை நிலையத்தில் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை சார்பில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அப்போது நினைவு ஸ்தூபி போல உபகரணங்களை வைத்து அதற்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு மாவட்ட அலுவலர் கணேசன் தலைமை தாங்கி, நினைவு ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து உதவி மாவட்ட அலுவலர்கள் மயில்ராஜ், சிவக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மலர்வளையம் வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment