திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday, 12 April 2024

திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

 


திண்டுக்கல்லில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்  தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை 


திண்டுக்கல்லில் இன்று மதியம் பறக்கும் படை அதிகாரி ஆனந்த் பாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிவிசி என்ற தனியார் ஏஜென்சி வாகனத்தை நிறுத்தி போலீசார் மற்றும் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்டனர் அதில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக பறக்கும்படை அதிகாரி ஆனந்த்பாபு திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உடனடியாக வாகனத்தை கொண்டு சென்று அதிகாரியிடம் ஒப்படைத்தார். மேலும் ஆவணங்களை பரிசீலனை செய்து இது தொடர்பாக திண்டுக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் கீழ் அவர் வருகை தந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுக்கான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மும்பையிலிருந்து தங்கம் விமானம் மூலமாக மதுரைக்கு கொண்டுவரப்பட்டு மதுரை, நத்தம், திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட நகை கடைகளுக்கு நகைகளை கொடுப்பதற்காக கொண்டுபோவதாக தகவல் தெரிவித்தனர். இதற்கான ஆவணங்கள் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகளும், அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருவதால் இதற்கான முழு ஆவணங்கள் இருக்கிறதா என்ற முழு விவரத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad