பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் தாயின் கண் முன்னே தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி
திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கினர். உடனடியாக குழந்தைகளின் அம்மா செய்வது அறியாமல் திகைத்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் குளத்தில் இறங்கி 2 குழந்தையும் மீட்டனர். ஆனால் ரோகிணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.ஹரிணி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது. மேற்படி சம்பவம் குறித்து வடமதுரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment