திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் 80 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திண்டுக்கல், மாலப்பட்டி பிரிவு அருகே காட்டுமடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருப்பையா வீட்டில் 80 சவரன் நகை, ரூ.7 லட்சம் மதிப்பு ரோலக்ஸ் வாட்ச் திருடு போன வழக்கில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் சுரேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சுரேஷின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் சுரேஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment