திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 இளம்பெண்களை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 27 April 2024

திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 இளம்பெண்களை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

 


திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 இளம்பெண்களை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது


திண்டுக்கல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலர்களை கட்டிப்போட்டு கத்திமுனையில் 2 இளம்பெண்களை 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சுள்ளான் என்ற பிரசன்னகுமார் (25), சரண்குமார் (21), வினோத்குமார் (26), சூரியபிரகாஷ் (22) ஆகிய 4 பேரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்.பி.பிரதீப் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad