திண்டுக்கல் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது 187 மதுபான பாட்டில்கள் ஆட்டோ பறிமுதல் தாலுகா போலீசார் நடவடிக்கை
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன், பயிற்சி சார்பு ஆய்வாளர் ஜெயச்சந்திரன், காவலர்கள் வனராஜ், பாலகிருஷ்ணன், வேலுமணி ஆகியோர் வேடப்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்திய மாதவன், ரமேஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 187 மதுபான பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment