வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி நூதன போராட்டம் உலக மகளிர் தினத்தில் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து DYFI நடத்தியது
உலக மகளிர் தினத்தில் பெண்கள், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து வாயில் கறுப்பு ரிப்பன் கட்டி நூதன போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டுக்கல் நகர் குழு சார்பில் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் சந்திப்பில் நடைபெற்றது.
நகர தலைவர் சூர்யா தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் கே.ஆர்.பாலாஜி நகர செயலாளர் எம்.பிரேம்குமார் நகர துணை தலைவர் தர்மலிங்கம் நிர்வாகிகள் தாமு, பிரபு , சபரிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment