திண்டுக்கல்லில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது
திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் அருகே பெரியார்நகர் பகுதியில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஆத்திரத்தில் கணவர் முத்தையா மனைவி லட்சுமியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய முத்தையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment