திண்டுக்கல்லில் இரயிலில் அடிபட்டு வாலிபர் பலி குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் விபரீத முடிவு
திண்டுக்கல் கிழக்கு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி.இவர் மது போதைக்கும், கஞ்சாவுக்கும் அடிமையாகி தினமும் இவரது அப்பா முருகனை அடித்து பணம் வாங்கி மது குடிப்பார். இந்நிலையில் முருகன் மகன் மூர்த்தி அடிப்பதால் திருச்சிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாத மன உளைச்சலில் திண்டுக்கல் அனுமந்தநகர் பகுதியில் ஈரோட்டில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து இரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போதைக்கு வழி இல்லையென்றால் உயிரையும் மாய்த்து கொள்ளும் வகையில் இளைய சமுதாயம் மாறி வருவது வேதனைக்குறியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment