திண்டுக்கல் திமுக சார்பில் உலக மகளிர் தின விழா எம்.பி. கனிமொழி சிறப்புரை
திண்டுக்கல்லில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் தி.மு.க எம்.பி.கனிமொழி சிறப்புரை ஆற்றினார். முன்னதாக திண்டுக்கல்லுக்கு வருகை தந்த திமுக துணை பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்களை திமுக கழக துணை பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் வரவேற்றனர்.
விழாவில் பெண்களின் முக்கியத்துவம் எல்லா துறைகளிலும் இன்றியமையாததாக மாறி வருவதின் அவசியம் குறித்து பேசினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment