திண்டுக்கல் பழனி அருகே ஆட்டுக்குட்டியுடன் விவசாயி தர்ணா:
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாயி ராஜேந்திரன் என்பவரின் ஆட்டை நாய் கடித்துக் குதறியதால் ஆடு பலியாகி உள்ளது இதனால் பழனி தாலுகா அலுவலகத்திற்கு இறந்த ஆட்டுடன் வந்த ராஜேந்திரன் தாலுகா அலுவலகத்தின் முன் பகுதியில் இறந்தஆட்டுக்குட்டியுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் ஏற்கனவே மூன்று ஆடுகள் நாய் கடித்து பலியான நிலையில் மீண்டும் நாய் கடித்து தன்னுடைய ஆடு பலியானது இதனால் வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மேலும் கோதைமங்கலம் ஊராட்சி தலைவரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் விவசாயி ராஜேந்திரன் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment