திண்டுக்கல் காந்திஜி தொடக்கப் பள்ளியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் மக்கான் தெரு பகுதியில் அமைந்துள்ள காந்திஜி தொடக்கப்பள்ளியில் இன்று 3:3:24 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு இந்தபோலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது. இந்நிகழ்வில் முகமதியாபுரம் அங்கன்வாடி ஆசிரியர்களான ஆ.தனராணி, ம.ஜானகி, மேலும் GTN கலைக்கல்லூரியில் இருந்து வந்த மாணவிகள்M.சரண்யா, A.சில்வியா ஆகிய இரண்டு மாணவிகள் இந்த முகாமில் வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள மக்கான் பாறை குளம் பெரியார் நகர்,அங்கு விலாஸ் இறக்கம், முகமதியா புரம் போன்ற பகுதிகளில் இருந்து இங்கு வந்து பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு சென்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment