ஜிடிஎன் கல்லூரி அருகே மது அருந்திவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் மீது இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலி
திண்டுக்கல் செல்லமந்தாடி சிவனாண்டி கொட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் GTN கல்லூரி அருகே மது அருந்திவிட்டு தண்டவாளத்தை கடக்கும் போது திண்டுக்கல் வழியாக சென்ற ஒரு இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் இரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக தண்டவாளத்தை கடக்கும் நபர்கள் விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. இரயில்களின் வேகம் முன்பைவிட அதிகமாக இருப்பதால் தண்டவாளங்களை கடக்கும்போது மிகவும் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment