ஜி.டி.என். கல்லூரியில் விளையாட்டு விழா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்
திண்டுக்கல் ஜி.டி என் கலைக் கல்லூரியில் 60 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8.30 மணி அளவில் கல்லூரி விளையாட்டுமைதா னத்தில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதைநடந்தது. அதையடுத்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. விழா வுக்கு கல்லூரி தாளாளர் ரெத்தினம் தலைமை தாங்கிப் பேசினார். தமிழ்நாடு ஒலிம்பிக் கழகத்தின் இணை செயலாளர் பாலாஜி மரடப்பா விழாவை தொடங்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் பாலகுருசாமி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், மாணவர்கள் அச்சத்தை கைவிட்டு விடாமுயற்சி செய்தால் உச்சம் தொடலாம், மாணவர்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை சரியாக பயன்படுத்தி சிறந்த தொழில் முனைவோ ராகவும், அரசு பணியாளர்களாகவும் மாற வேண்டும், போட்டித் தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு வழி காட்ட எப்போதும் நான் தயாராக இருக்கிறேன் என்று பேசினார். அவரைத் தொடர்ந்து இந்திய கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சூசை ராஜ், கல்லூரியில் விளையாட்டுதுறை யில் சாதனை படைத்து வரும் மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினார்.
பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கப்பட் டது. நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் துரை ரெத்தினம், கல்வி இயக்குனர் மார்க்கண் டேயன், பாராமெடிக்ல்கல்லூரி முதல்வர் மனோகரன், இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வர் தீபா,செவிலியர் கல்லூரி முதல்வர் வசந்தா மணி, சட்டக்கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் ஜெயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment