திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் உண்டியல் மார்ச்.1, 4-ல் எண்ணிக்கை நடைபெற்றது. இரு நாட்கள் எண்ணிக்கையில் காணிக்கையாக 2.147 கிலோ தங்கம், 28.196 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 4 கோடியே 89 லட்சத்து 90 ஆயிரத்து 581 மற்றும் 1608 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. நேற்று (மார்ச்.4) எண்ணிக்கையில் காணிக்கையாக 1.354 கிலோ தங்கம், 16.340 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 84 லட்சத்து 84 ஆயிரத்து 317 மற்றும் 1063 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இன்று (மார்ச் 5) உண்டியல் எண்ணிக்கை நடைபெற உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment