பட்டிவீரன்பட்டி அருகே பாஜக நிர்வாகி மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்த வழக்கில் கணவன் மனைவி உட்பட 3 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே M.வாடிப்பட்டியை சேர்ந்த பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிவதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வத்தலகுண்டுவில் குடியிருக்கும் ஆகாஷ் மனைவி ஆஷாவின் பேரில் தனியார் நிதி நிறுவனம் மூலமாக ரூ.2 லட்சம் வரை கடன் பெற்று வீட்டு உபயோக பொருட்கள் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆகாஷ், ஆஷா தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் தீபக் ஆகிய 3 பேரும் மணிகண்டனை கடனை உடனே செலுத்த வேண்டும் என்று மிரட்டினார்களாம் இதனால் மன உளைச்சலில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி சிவதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது இதை அடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஆகாஷ் அவரது மனைவி ஆஷா மற்றும் தீபக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment