திண்டுக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது 3 கேமரா, ரூ.10 ஆயிரம் பணம், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் - நகர்ஏஎஸ்பி அதிரடி நடவடிக்கை
திண்டுக்கல்,ஆர் .எஸ் ரோட்டில் உள்ள மணி அன் கோ என்ற கடையை கடந்த13-ம் தேதி உடைத்து பணம் ரூ. 1,80,000/திருடி சென்றது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் ஏஎஸ்பி யின் தலைமையில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி, சார்பு ஆய்வாளர் ராஜகோபால், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் மற்றும் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான்,செல்வி சைபர் கிரைப் காவலர்கள் சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அஜய், ஹரிஹரன், மாரிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ,10,000 பணம், 3 கேமராக்கள், 2 இரு சக்கர வாகனங்கள், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment