2 காவல் ஆய்வாளர்களுக்கு பிடி ஆணை திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு
திண்டுக்கல் கொடைரோடு ரயில் நிலையம் அருகே கடந்த 2019 ஆம் ஆண்டு பாலாஜி என்பவர் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் ஹரிதரன் உள்ளிட்ட 4 பேரை கொடைரோடு இரயில்வே போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் காவல் ஆய்வாளர்களாக இருந்த கீதாதேவி, செல்வி ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதில் கீதாதேவி தற்போது அருப்புக்கோட்டை காவல் நிலையத்திலும், செல்வி திருநெல்வேலி இரயில்வே காவல் நிலையத்திலும் ஆய்வாளர்களாக உள்ளனர். சம்மன் அனுப்பியும் ஆஜராகாத காவல் ஆய்வாளர்கள் கீதாதேவி மற்றும் செல்வி ஆகிய இருவருக்கும் பிடி ஆணை பிறப்பித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி மேகபூப் அலிகான் உத்தரவிட்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment