திண்டுக்கல்லில் 2 நாட்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்:
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் வழக்கறிஞர் முருகேஸ்வரி அவர்களின் பிரச்சனை சம்மந்தமாக காவல்துறையினர் கைது செய்வதாக உறுதி அளித்துவிட்டு கைது செய்யாமல் மெத்தன போக்காக செயல்பட்டதை கண்டித்து நாளை செவ்வாய்க்கிழமை ஒரு நாள் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி சென்னையில் தொடர் உண்ணா நிலை அறப்போராட்டம் நடத்தி வரும் வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக புதன்கிழமை ஒரு நாள் என 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment