பணம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார் கூட இல்லை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக181 புகார் மனுக்கள் உடனடி நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் நேற்று வரை 181 புகார்கள் தேர்தல் விதிமுறைகள் மீறல் தொடர்பாக வந்துள்ளன . 169 புகார்கள் 1950 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அதிகபட்சமாக வந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டுமே 30 புகார்கள் அளிக்கப்பட்டன.
மொத்தம் 181 புகார்களையும் விசாரித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரு புகார் கூட பணம் வழங்கியதாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment