திண்டுக்கல் புறநகர் பகுதியில் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் பிரபல கொள்ளையன் கைது 15 பவுன் தங்க நகை பறிமுதல்
திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் மர்ம நபர் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்றது தொடர்பாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து SP பிரதீப் உத்தரவின் பேரில் DSP உதயகுமார் மேற்பார்வையில் தாலுகா இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் லாரன்ஸ் மற்றும் காவலர்கள் கிளாடிஸ், பீட்டர், மாணிக்கவாசகம், உபைத் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தும், கைரேகைகளை ஆய்வு செய்தும், தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்த் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment