கழிவறையில் இருந்து வெளியேறும் நீர் சாலைகளில் வழிந்தோடி சுகாதாரக் கேடு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககோரிக்கை
திண்டுக்கல் காந்தி மார்க்கெட் அருகே கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் குமரன் பார்க் எதிர்புறம் அமைந்துள்ள கழிவறையில் இருந்து வெளியேறும் நீர் சாலைகளில் வழிந்தோடி கொண்டிருக்கிறது.
இந்த சாலையின் வழியாகத்தான் கோவிலுக்கு செல்லும் அனைத்து பக்தர்களும் செருப்பு கூட அணியாமல் கடந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது.உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment