இனி தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்தக் கூடாது எலக்சன் கமிஷன் :
தேர்தல் பரப்புரை கூட்டங்களில் குழந்தைகளை பயன்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி தேர்தல் பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்துவது தேர்தல் விதி மீறல் என்பதால் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது ஆனால் இந்த விஷயத்தில் பெற்றோர்களுடன் குழந்தைகள் பரப்புரையில் ஈடுபட்டால் அது குற்றம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment