திண்டுக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் சார்பாக நினைவு பரிசு
திண்டுக்கல்லை அடுத்துள்ள கணவாய்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 117 வது ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் பள்ளியை திறம்பட வழி நடத்திச் செல்லும் தலைமை ஆசிரியர் பிரிட்டோ லினஸ் ராஜ் அவர்களின் சேவையை பாராட்டி தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் (TUJ) சங்கத்தின் சார்பாக நினைவு கேடயத்தை சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் திரு இராமகிருஷ்ணன்,செயலாளர் பாலமுருகன்,இணைச் செயலாளர் அரியநாயகம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.உடன் அரசு கல்வி அலுவலர்கள் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment