திண்டுக்கல்லில் சஞ்சீவி சித்த வைத்திய சங்க கூட்டம் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களில் இருந்து ஏராளமான சித்த வைத்தியர்கள் பங்கேற்பு
திண்டுக்கல் நத்தம் ரோடு வள்ளலார் பள்ளி அருகே அமைந்துள்ள சஞ்சீவி சித்த வைத்திய சங்க அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாதாந்திர கூட்டம் தலைவர் தீர்க்கதரிசி சித்த வைத்திய மாமணி சந்தியாகு தலைமையில் நடைபெற்றது.வைத்தியர்களின் செய்முறை விளக்கங்கள், கலந்துரையாடல்கள், சந்தேக விளக்கங்கள் நடைபெற்றது.அனைவருக்கும் விழா நிறைவில் இனிய மதிய விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சங்க செயலாளர் சித்த வைத்திய இரத்தினம் மகுடீஸ்வரன், பொருளாளர் மூலிகை நிபுணர் சாணார்பட்டி ஜெயராமன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த சிறப்பு கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று நடைபெறும் என்று செயலாளர் மகுடீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment