சிறுமலையில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை ஊராட்சியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடமான்குளம் சாலையில் தாழக்கடை பிரிவு முதல் தாழக்கடை வரை ரூ.2 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு சிறுமலை ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். இதில் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் வெள்ளிமலை கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். விழாவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெற்றிவேல், ஒப்பந்ததாரர் வெள்ளைச்சாமி, ஊராட்சி செயலர் முத்துக்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment